நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது: ரஜினிகாந்த் பேச்சு

Rajni_TH_2113202fசுப்ரீம் கோர்ட் முன்னாள் நீதிபதி பி.எஸ். கைலாசத்தின் 100-வது பிறந்த நாளையொட்டி அவரது நினைவாக தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சி நேற்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், குஜராத் ஐகோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி பி.ஆர். கோகுல கிருஷ்ணன், நீதிபதி பி.எஸ். கைலாசத்தின் மருமகனும் முன்னாள் மத்திய நிதி மந்திரியுமான ப.சிதம்பரம், இந்து நாளிதழின் ஆசிரியர் என்.ராம், நல்லி குப்புசாமி செட்டியார், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தபால் தலையை வெளியிட்டு பேசிய சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், ’நீதிபதிகள் நியமனத்தில் மதம், சாதி, மொழி பாகுபாடு கூடாது என்று வலியுறுத்தினார். இந்த பாகுபாடுகள் இல்லாத வகையில் நீதிபதிகள் நியமிக்கப்பட்டால் நீதித்துறை சிறப்பாக இயங்கும்.

நீதித்துறை மற்றும் நீதிபதிகள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை மக்கள் இழந்து விடக்கூடாது. நீங்கள் அவர்களை சந்தேகப்பட ஆரம்பித்தால், வம்பில் மாட்டிக் கொள்வோமோ.., என்ற அச்சத்தில் நியாயமாக செயல்பட நேர்மையானவர்கள் தயங்கக்கூடும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

தபால் தலையின் முதல் பிரதியை பெற்றுக்கொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், ‘1970-ம் ஆண்டில் இருந்தே நீதிபதி பி.எஸ். கைலாசத்தின் குடும்பத்தோடு நெருங்கிய தொடர்பு வைத்திருப்பவன் என்ற முறையில் தபால் தலையின் முதல் பிரதியை பெற்றுக்கொள்கிறேன்’ என தெரிவித்தார்.

கைலாசத்தின் மனைவியான சவுந்திரா கைலாசம் ஆன்மிகத்தில் மிகுந்த ஞானம் கொண்டவர். இத்தனை ஞானம் எங்கிருந்து வந்தது? என அவரிடம் நான் ஒருமுறை கேட்டேன். தனது கணவரான நீதிபதி கைலாசத்திடம் பெற்ற ஞானம்தான் அது, என அவர் பதில் அளித்தார்.

அப்படி என்றால், கைலாசம் எவ்வளவு ஞானவானாக இருந்திருக்க வேண்டும்? அவர் பெரிய நீதிவானாகவும் திகழ்ந்தார். நீதிமன்றங்களை நம்பித்தான் இந்த நாடு இருக்கின்றது.

மக்கள் கெட்டுப்போனாலும், அரசியல்வாதிகள் கெட்டுப்போனாலும் நாடு உருப்படும். ஆனால், நீதிமன்றங்கள் கெட்டுப்போனால் நாடு நன்றாக இருக்காது’ எனவும் ரஜினிகாந்த் கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online