முகம் சுழிக்க வைக்காத சந்தானம் படம்

1442229660-9963சந்தானம் காமெடி என்றால் டாஸ்மாக்கும், சைடிஷ்ஷாக இரட்டை அர்த்த வசனங்களும் இருக்கும். அப்படி எதுவுமில்லாத, குடும்பத்துடன் பார்க்கக் கூடிய ஒரு படத்தை எடுத்திருப்பதாக கூறுகிறார், வாலிபராஜா படத்தின் இயக்குனர் சாய் கோகுல் ராம்நாத்.

சந்தானம், சேது, விஷாகா, விடிவி கணேஷ், சீனிவாசன் இணைந்து நடித்த, கண்ணா லட்டு தின்ன ஆசையா கரன்சியை அள்ளியது. அதே கூட்டணிதான் வாலிபராஜாவிலும். கூடுதலாக சித்ரா லட்சுமணன், ஜெயப்பிரகாஷ் ஆகியோரும் உள்ளனர்.

“இதுவரை சினிமாவில் எத்தனையோ குடும்பங்களைப் பார்த்து இருப்பார்கள். ஆனால் இப்படத்தில் வரும் ஒரு குடும்பத்தினர் வித்தியாசமாக இருப்பார்கள்.

அவர்களது ஒவ்வொரு செயலும் பேச்சும் சிரிக்க வைக்கும்” என்றார் சாய் கோகுல் ராம்நாத். அதுமட்டுமல்ல, ஒரு காட்சியில் கூட முகம் சுளிக்க வைக்காதபடி படம் இருக்கும் என்று உத்திரவாதமும் தருகிறார்.

சந்தானம் டாக்டர் வாலிப ராஜா என்கிற முக்கிய வேடமேற்று நடித்துள்ள படமிது. சந்தானத்தின் தோற்றம் ஹாலிவுட் இயக்குநர் வுடி ஆலனை பின்பற்றி வடிவமைக்கப்பட்டுள்ளதாம். அவர் இதில் ஒரு சைக்கிரியாட்டிஸ்டாக வருகிறார். அவர் கோணத்தில் வரும் ஒரு வித்தியாசமான குடும்பம்தான் கதையின் மையம்.

அவர்களின் பிரச்சினையை சந்தானம் எப்படித் தீர்க்கிறார் என்பதே படத்தின் கதை.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online