முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கும் சல்மான் கான்

salman_govinda‘கத்தி’ படத்திற்குப் பிறகு முருகதாஸ் தற்போது ‘அகிரா’ என்னும் இந்தி படத்தை இயக்கி வருகிறார். இதில் சோனாக்‌ஷி சின்ஹா நாயகியாக நடித்து வருகிறார். மேலும் ராய் லட்சுமி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இப்படம் தமிழில் வெளியான ‘மௌனகுரு’ படத்தின் ரீமேக்காகும். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தையடுத்து சல்மான் கானை வைத்து படம் இயக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தயாரிப்பாளர் அதுல் அக்னி கோத்ரி படத்தில் சல்மான் கான் நடிக்க இருக்கிறார் என்று செய்திகள் வெளிவந்தது.

அது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அதுல் தனது அடுத்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சல்மான் கான் நடிக்க வைக்க திட்டமிட்டிருக்கிறார்.

இது தொடர்பாக சல்மானும், முருகதாசும் சமீபத்தில் சந்தித்து பேசியுள்ளனர். விரைவில் இருவரும் இணைந்து பணிபுரிவார்கள் என்று தெரிகிறது. தற்போது சல்மான் ‘சுல்தான்’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை முடித்த பின்னர் முருகதாஸுடன் இணைவார் என்று தெரிகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online