விஜய்யின் புலி ப்ரோமோ பாடல் வெளியானது

Vijays-Puliவிஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலி’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் மற்றும் டிரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேநேரத்தில் பல்வேறு சாதனைகளையும் முறியடித்துள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ப்ரோமோ பாடலை நேற்று வெளியிடப்போவதாக அறிவித்திருந்தனர். ஆனால், ஒரு சில காரணங்கள் நேற்று வெளியிட முடியாமல் போனது. இந்நிலையில், இன்று நண்பகல் 12 மணிக்கு இந்த பாடலை வெளியிடப் போவதாக அறிவித்தனர்.

அதன்படி, சரியாக 12 மணிக்கு ‘புலி’ படத்தின் ப்ரோமோ பாடல் யூடியூப்பில் வெளியிடப்பட்டது. இந்த ப்ரோமா பாடலில் இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் பாட்டு பாடி, நடனமாடுவது போலவும், இடையிடையே படத்தின் சில காட்சிகளையும் கோர்வையாக கொடுத்துள்ளனர்.

‘புலி’ படத்தின் டீசர் மற்றும் டிரைலர் பெரிய சாதனை புரிந்ததைத் தொடர்ந்து இந்த ப்ரோமோ பாடலும் பெரிய சாதனை படைக்கும் என படக்குழுவினர் நம்புகின்றனர். வரும் அக்டோபர் 1-ந் தேதி படத்தை வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன், ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர். சிம்புதேவன் இயக்கியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online