விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலி’ படம் வரும் அக்டோபர் 1-ந் தேதி வெளியாக இருக்கிறது. இதற்கான பணிகளில் தற்போது இப்படக்குழு தீவிரமாக களமிறங்கியிருக்கிறது.
இப்படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள், ப்ரோமோ பாடல் ஆகியவை வரிசையாக வெளியாகி, ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. இந்நிலையில் இப்படம் சென்சாருக்கு தயாரானது. படத்தை பார்த்த தணிக்கை குழு அதிகாரிகள் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும்படி, இப்படத்தை சிம்புதேவன் இயக்கியிருப்பதால் படத்திற்கு தணிக்கை குழுவினர் ‘யு’ சான்றிதழ் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சுருதிஹான், ஹன்சிகா ஆகியோர் நடித்துள்ளனர். நான் ஈ சுதீப், ஸ்ரீதேவி கபூர், பிரபு, வித்யூலேகா ராமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். நட்டி நட்ராஜ் ஒளிப்பதிவு அமைத்துள்ளார். எஸ்.கே.டி. ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் பி.டி.செல்வகுமார், சிபு தமீன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.
விஜய் நடித்த படங்களான ‘காவலன்’, ‘வேலாயுதம்’, ‘நண்பன்’, ‘துப்பாக்கி’, ‘தலைவா’, ‘ஜில்லா’, ‘கத்தி’ ஆகிய படங்கள் ‘யு’ சான்றிதழ் வாங்கியது. இப்படங்களை தொடர்ந்து ‘புலி’ படமும் ‘யு’ சான்றிதழ் வாங்கியிருப்பது விஜய் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.