மகேஷ்பாபு நடிக்கும் நேரடி தமிழ் படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது

mahesh-babu_640x480_81437129346தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, நேரடியாக நடிக்கும் தமிழ் படம் ‘பிரம்மோற்சவம்’. இப்படம் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகவிருக்கிறது.

சமீபத்தில் மகேஷ் பாபு நடிப்பில் வெளிவந்த ‘செல்வந்தன்’ படம் தமிழ்நாட்டில் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து தற்போது நேரடி தமிழ் படத்தில் நடிக்க முடிவெடுத்து, இந்த படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், ப்ரணிதா என மூன்று கதாநாயகிகள் நடிக்கவுள்ளனர். இவர்களுடன் சத்யராஜ், ரேவதி மற்றும் பலரும் நடிக்கிறார்கள். பிவிபி சினிமா இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. மைக்கி ஜே.மேயர் இசையமைக்கும் இப்படத்துக்கு ரத்னவேலு ஒளிப்பதிவு செய்யவிருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று கோலாகலமாக தொடங்கியது. மகேஷ் பாபுவின் மிகப் பிரம்மாண்டமான வெற்றிக்கு பிறகு ஒரு மங்களகரமான தேதியில் திருப்பதியில் தொடங்கியுள்ளது இப்படத்தின் படப்படிப்பு.

இப்படப்பிடிப்பில் மகேஷ் பாபு கலந்துகொண்டார். இப்படம் குடும்பத்தோடு பார்க்கும் பொழுதுபோக்கு படமாக உருவாக இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries