விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய நமீதா

namitha-hot-sexy-new-stills-0901விநாயகர் சதுர்த்தி விழாவை நமீதா கோலாகலமாக கொண்டாடினார். இதுகுறித்து அவர் கூறியபோது, விநாயகர் சதுர்த்தி மிகவும் முக்கியமான விழா. வருடந்தோறும் இதை நான் எனது குடும்பத்துடன் சூரத்தில் உள்ள எங்கள் சொந்த வீட்டில் கொண்டாடுவோம்.

இதில் எனது பெற்றோர், தாத்தா, பாட்டி, மாமா, அத்தை எல்லோரும் கலந்து கொள்வார்கள். 10 நாட்கள் கோலாகலமாக விழா நடக்கும். விதவிதமான இனிப்புகளை அம்மா விநாயகருக்கு படைப்பார். சாக்லேட், நாணயம், பைபர்களில் விதவிதமாக செய்யப்பட்ட விநாயகர் சிலைகளை வைப்போம்.

நான் படிக்கும் காலத்தில் ஓம் ஸ்ரீகணேச நம என்று எனது பரீட்சை விடைத்தாளின் மேல் பகுதியில் எழுதி விட்டுதான் தேர்வை எழுதத் தொடங்குவேன். இப்போது புதிய படத்துக்கு ஒப்பந்தம் செய்யும் போது அதை எழுதுவேன்.

இந்த விநாயகர் சதர்த்தியை நான் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறேன். எனது உடல் எடை குறைந்த பிறகு மோகன்லாலுடன் ‘புலிமுருகன்’ என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறேன். சில கன்னட, தெலுங்கு படங்களிலும் நடிக்க வாய்ப்பு வந்திருக்கிறது. இது எனக்கு மிகவும் மகிழ்ச்சியான விநாயகர் சதுர்த்தி.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries