வித்யூராமனுக்கு பிரியாணி விருந்து கொடுத்த அஜித்

vidyu-aijth-fiஅஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை ‘தல 56’ என்று அழைத்து வருகிறார்கள். இதில் அஜித்துக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்து வருகிறார்.

மேலும் லட்சுமிமேனன் தங்கையாகவும், கபீர்சிங் வில்லனாகவும் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் அஸ்வின், வித்யூராமன் உள்ளிட்ட பலரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

தற்போது இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தில் நடித்து வரும் வித்யூ ராமனுக்கு அஜித் பிரியாணி விருந்து கொடுத்திருக்கிறார். சமீபத்தில் வில்லன் கபீர்சிங்குடன் நடிக்கும் போதும் அவருக்கு பிரியாணி விருந்து கொடுத்திருக்கிறார்.

சமீபகாலமாக அஜித் தான் நடிக்கும் படங்களின் படக்குழுவினருக்கு பிரியாணி விருந்து கொடுத்து வருகிறார்.

அதுபோது ‘தல 56’ படக்குழுவினர் அனைவருக்கும் படப்பிடிப்பு முடிந்தவுடன் பிரியாணி விருந்து கொடுப்பார். ஆனால் இந்த படத்தில் நடிப்பவர்களுக்கு மட்டும் தனித்தனியாக விருந்து கொடுத்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online