ஆர்யாவுடன் இணையும் கே.வி.ஆனந்த்?

arya-kv-anand‘அயன்’, ‘கோ’, ‘மாற்றான்’ படங்களை இயக்கிய கே.வி.ஆனந்த் கடைசியாக ‘அனேகன்’ என்னும் படத்தை இயக்கினார். இதில் தனுஷ் நாயகனாகவும், அம்ரியா தஸ்தூர் நாயகியாகவும் நடித்திருந்தார்கள்.

மேலும் கார்த்திக் இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்திற்குப் பிறகு நல்ல கதையை கே.வி.ஆனந்த் உருவாக்கியிருப்பதாகவும் அதில் அஜித் அல்லது சிவகார்த்திகேயன் நாயகனாக நடிப்பார்கள் என்றும் செய்திகள் வெளியாகின.

ஆனால், தற்போது இவர்கள் இடத்தை ஆர்யா பிடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது.

கே.வி.ஆனந்த் சொன்ன கதை ஆர்யாவுக்கு மிகவும் பிடித்துவிட்டதாகவும், இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online