அமிதாப், ரஜினியை இயக்கவும், ராமாயணத்தை பிரமாண்ட திரைப்படமாக்கவும் ஆசை: பிரபுதேவா பேட்டி

Prabhu Deva_0_0நடன துணை இயக்குனர், நடன இயக்குனர், கதாநாயகன் என சினிமாவின் பல படிக்கட்டுகளை ஏறி தற்போது பல மொழிகளில் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள பிரபுதேவா, ’லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்’ பாணியில் ராமாயண காவியத்தை பிரமாண்ட திரைப்படமாக்கவும், பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் மற்றும் தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து படங்களை இயக்கவும் ஆசைப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக, பிரபல செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள பிரபுதேவா கூறியதாவது:-

ஆங்கிலப் படமான ’லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்’ திரைப்படம் போல் நமது ராமாயணத்தையும் ஏராளமான பொருட்செலவில் பிரமாண்டமான திரைப்படமாக இயக்க ஆசைப்படுகிறேன்.

அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்ய பெரிய தயாரிப்பாளர் தேவை. சூப்பர் ஸ்டார்களான அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் ஆகியோர் நடிப்பிலும் படங்களை இயக்க ஆசைப்படுகிறேன்.

இதற்கு முன்னர் அமிதாப் பச்சனுடன் இணையும் ஒரு வாய்ப்பு உருவானது. ஆனால், தேதி ஒத்துவராததால் அந்த வாய்ப்பு கைகூடவில்லை.

அவரோடு பணியாற்ற வேண்டும் என விரும்புகிறேன். அவர் எப்போது அழைத்தாலும் நான் தயாராக இருக்கிறேன். இதேபோல், ரஜினிகாந்துடனும் பணியாற்ற மிகவும் விரும்புகிறேன். பெரிய சூப்பர் ஸ்டாரான அவர், என்னோடு ஒரு படம் செய்வதைப் பற்றி முடிவெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online