பாடகராக அவதாரம் எடுத்த பிரபுதேவா

prabhudeva-16நடன இயக்குனராக ரசிகர்களை கவர்ந்த பிரபுதேவா, தமிழில் ‘போக்கிரி’, ‘வில்லு’, ‘எங்கேயும் காதல்’ படங்கள் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்து ரசிகர்களை கவர்ந்தார். இவர் தமிழ் மட்டுமல்லாது, இந்தியிலும் பல வெற்றி படங்களை இயக்கி முன்னணி இயக்குனராக வலம் வந்துக்கொண்டிருக்கிறார்.

இவர் சமீபத்தில் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்து, ‘வினோதன்’ படத்தை தயாரித்து வருகிறார். இந்நிலையில் இவர் பாடகராக அவதாரம் எடுத்திருக்கிறார். இந்தியில் ‘சிங் இஸ் பிளிங்’ என்ற படத்தின் மூலம் பாடகராகியிருக்கிறார் பிரபுதேவா.

இப்படத்தின் இசையமைப்பாளர் சந்தீப், பிரபுதேவாவின் குரல் வளத்தை பார்த்து, ஒரு பாடலுக்கு பாடச்சொல்லி கேட்டாராம். அவரும் இதையேற்று பாடி காண்பித்திருக்கிறார்.

இது இசையமைப்பாளருக்கு பிடித்து போக பிரபுதேவாவையே முழுப் பாடலை பாட வைத்திருக்கிறார். ‘சிங் இஸ் பிளிங்’ படம் அக்டோபர் 2-ம்தேதி வெளியாக இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries