பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் மீது தாக்குதல்?

1442749902-0612பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மதுரை விமான நிலையத்திற்கு வந்த போது பிரபல திரைப்பட நடிகரின் ரசிகர்கள் தாக்கியுள்ளனர்.

நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேட்டியளித்துள்ளார். அந்த பேட்டியில் பிரபல நட்சித்திர நடிகர் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நட்சித்திர நடிகரின் ரசிகர்கள் சிவகார்த்திகேயனை டுவிட்டர் வலைதளத்தில் வசைப்பாடி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று சிவகார்த்திகேயன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்ள மதுரை வருவதாக கேள்விப்பட்ட நட்சித்திர நடிகரின் ரசிகர்கள் மதுரை விமான நிலையத்தின் வாசலில் காத்திருந்தனர்.

பின்னர் விமானநிலையத்திலிருந்து வெளியே வந்த சிவகார்த்திகேயனை, காத்திருந்த அந்த ரசிகர்கள் கூட்டம் கண்மூடித்தனமாக தாக்கியதாகவும், அப்பொழுது சிவகார்த்திகேயனின் பாதுகாவலர்கள் அவர்களை தடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online