கபாலி படத்திலிருந்து விலகியது ஏன்?: பிரகாஷ் ராஜ் பதில்

hqdefaultரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் ‘கபாலி’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மேலும் இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தில் நடிக்க பிரகாஷ்ராஜ் முதலில் ஒப்புக்கொண்டிருந்தார். பின்னர் அப்படத்திலிருந்து விலகிக்கொண்டார். இதற்கான காரணம் தற்போது வெளியாகியிருக்கிறது.

பிரகாஷ்ராஜிடம் தொடர்ச்சியாக 60 நாட்கள் நடிக்க கேட்டிருக்கிறார்கள். ஆனால், பிரகாஷ் ராஜ் தற்போது 10 மொழி படங்களில் நடித்துக் கொண்டிருப்பதால் ‘கபாலி’ படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது.

இதனாலயே இந்த படத்தில் இருந்து விலகி இருப்பதாக பிரகாஷ் கூறியிருக்கிறார். மேலும் ரஜினியுடன் நடிக்க முடியாதது வருத்தமளிக்கிறது என்றும் கூறியிருக்கிறார்.

‘கபாலி’ படத்தில் ரஜினியுடன் ராதிகா ஆப்தே, கலையரசன், தினேஷ், தன்ஷிகா உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைக்கிறார். கலைப்புலி தாணு இப்படத்தை தயாரித்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online