மீண்டும் மொட்டை கெட்டப்பில் நடிக்கும் அஜித்

maxresdefaultஅஜித் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் அஜித் சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் நடிப்பதாகத்தான் முன்னதாக செய்திகள் வெளிவந்தது. அதைத் தொடர்ந்து அந்த கெட்டப்பில் இவர் நடித்த படங்களும் வெளிவந்தது.

இந்நிலையில், தற்போது மொட்டை தலையுடனும் அஜித் இந்த படத்தில் நடித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அஜித், மொட்டை தலையுடன் நடிக்கும் காட்சிகள் படத்தில் பிளாஸ்பேக்காக வருமாம்.

இந்த கெட்டப்புடன் எடுக்கப்பட்ட காட்சிகள் சமீபத்தில் கொல்கத்தாவில் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, அஜித் மொட்டை தலையுடன் ‘ரெட்’ படத்தில் நடித்திருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்து வருகிறார். மேலும், லட்சுமிமேனன், அஸ்வின் கக்குமனு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

அனிருத் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. வரும் தீபாவளிக்கு படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online