விஜய்க்கு டிரைவரான நான் கடவுள் ராஜேந்திரன்

two-more-comedians-in-ajith-56‘நான் கடவுள்’ படத்தில் கொடூர வில்லனாக அறிமுகமான ராஜேந்திரன், ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் மூலம் காமெடி வில்லனாக மாறினார். இப்படத்தை தொடர்ந்து இவருக்கு தொடர்ந்து காமெடி வேடங்களே கிடைத்து வருகின்றன. இவரும் அதை மறுக்காமல் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில், அட்லி இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படத்தில் நான் கடவுள் ராஜேந்திரனும் ஒப்பந்தமாகியிருக்கிறார். இப்படத்தில் இவர் விஜய்க்கு கார் டிரைவராக வருகிறாராம்.

ஏற்கெனவே, அட்லி இயக்கத்தில் வெளிவந்த ‘ராஜாராணி’ படத்திலும் ராஜேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரொமான்ஸ், ஆக்ஷன் கலந்த படமாக உருவாகி வரும் இப்படத்தில் சமந்தா, எமி ஜாக்சன் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்து வருகின்றனர். ராதிகா சரத்குமார், பழம்பெரும் இயக்குனர் மகேந்திரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தில் விஜய், போலீஸ் கமிஷனராக நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries