டார்லிங்-2 படத்தின் பர்ஸ்ட்லுக் நாளை வெளியீடு

Official-trailer-of-Darling-tamil-movieஇசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் ‘டார்லிங்’ படம் மூலம் நடிகரானார். இதில் இவரது நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இதில் ஜி.வி. பிரகாஷுடன் நிக்கி கல்ராணி, சிருஷ்டி டாங்கே, பாலா, கருணாஸ் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தார்கள். சாம் ஆண்டன் இயக்கியிருந்த இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்திருந்தார்.

பேய் படமாக வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வணிக ரீதியாக இப்படம் வெற்றியடைந்தது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது.

இதன் இரண்டாம் பாகத்திலும் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே நடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தையும் ஸ்டூடியோ கிரீன் தயாரிக்கிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாக இருக்கிறது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries