கஸ்மோராவில் 11 கெட்டப்பில் நடிக்கும் கார்த்தி

karthi-reveals-about-kashmora-700x439‘கொம்பன்’ படத்திற்கு பிறகு கார்த்தி தற்போது ‘கஸ்மோரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கி வருகிறார். இதில், கார்த்திக்கு ஜோடியாக நயன்தாரா, ஸ்ரீதிவ்யா ஆகியோர் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தற்போது கார்த்தி இந்த படத்தில் 11 கெட்டப்புகளில் நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த 11 கெட்டப்புகளையும் 11 விதமான செட்களில் படமாக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

ஏற்கெனவே, இப்படத்திற்காக மூன்று விதமான செட்கள் அமைக்கப்பட்டு, அதில் முக்கியமான காட்சிகளை படக்குழுவினர் படமாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.

இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். ‘மெட்ராஸ்’ படத்திற்கு கார்த்தி நடிக்கும் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries