அம்மா அவதாரம் என்றதும், என்னவோ ஏதோ என்று பதறிவிடாதீர்கள். அம்மாதான், ஆனால் இது வேறு அம்மா.
பாகுபலியில் கொஞ்ச நேரமே வந்தாலும், தனது ஸ்கிரீன் பிரசன்ஸnல் பாகுபலியின் வாள்வீச்சைக்காட்டிலும் அதிக பெயரையும், புகழையும் சம்பாதித்தார், ரம்யா கிருஷ்ணன்.
அவரை பார்த்துவிட்டு, புலி ஸ்ரீதேவியைப் பார்த்தால் ஏதோ பஞ்சத்தில் அடிப்பட்டவர் போல் தெரிகிறது.
ரம்யா கிருஷ்ணன் அடுத்து மூன்று மொழிகளில் தயாராகும், கிரிக்கெட்டை மையப்படுத்திய படத்தில் நடிக்கிறார். இதில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் நாயகனாக நடிக்கிறார்.
அவருக்கு உற்சாகம் தந்து கிரிக்கெட் வீரராக உருவாக்கும் அவரது அம்மாவாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். பாகுபலிக்கு அப்படியே நேர்எதிரான மாடர்ன் அம்மா.
பிச்சு உதறுங்க மேடம்.