இயக்குனர் மிஷ்கின் இயக்கும் புதிய படம்

tamil_director_mysskin_images_stills_photos_02மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த படம் ‘பிசாசு’. இப்படத்தை தொடர்ந்து எந்த படமும் இயக்காமல் இருந்துவந்த மிஷ்கின், தற்போது ‘சவரகத்தி’ என்ற படத்தை தயாரிப்பதோடு, அதில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து மிஷ்கின் புதிய படமொன்றை இயக்க முடிவு செய்துள்ளார். இப்படத்தை டிரான்ஸ்வேர்ல்டு டெலி கம்யூனிகேஷன்ஸ் என்ற புதிய நிறுவனம் சார்பாக ரகுநந்தன் தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகனாக ஷ்யாம் என்ற புதுமுகம் நடிக்கவுள்ளார்.

மேலும், இப்படத்தில் நடிக்கவுள்ள பிற நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பை வருகிற நவம்பர் மாதம் தொடங்கவிருக்கின்றனர்.

‘சவரகத்தி’ படத்தின் இடைவிடாத படப்பிடிப்பிற்கு இடையிலும் தனது புதிய படத்திற்கான கதையை எழுதிக் கொண்டு வருகிறார் இயக்குனர் மிஷ்கின்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries