அமலாபால் இடத்தை பிடிப்பேன் : ஸ்ரீபிரியங்கா

kangaroo-actress-priyanka-photoshoot-stills-36‘கங்காரு’, ‘வந்தா மல’ படங்களில் நடித்தவர் ஸ்ரீபிரியங்கா. தற்போது ‘சாரல்’, ‘திருப்பதி லட்டு’ படங்களில் நடித்து வருகிறார். இதில், ‘சாரல்’ படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருகிறது.

இந்த படத்துக்கான ‘டப்பிங்கை’ ஸ்ரீபிரியங்கா ஒரே நாளில் முடித்து கொடுத்திருக்கிறார். இதுபற்றி அவரிடம் கேட்டபோது, ‘‘இந்த படத்தில் எனக்கு நல்ல வேடம் கிடைத்து உள்ளது. இந்த படத்தின் பாத்திரம் எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது. இதில் நான் நடித்த காட்சிகள் அனைத்துக்கும் ஒரேநாளில் டப்பிங் பேசி முடித்து விட்டேன்.

‘மைனா’ போன்ற காதல் கதையாக இது இருக்கிறது. அந்த படத்தில் அமலாபால் நடித்தது போன்ற ஆழமான வேடம் ‘சாரல்’ படத்தில் எனக்கு கிடைத்திருக்கிறது. அதை மிகவும் விரும்பி நடித்திருக்கிறேன். அமலாபால் ‘மைனா’ படத்தின் மூலம் பேசப்பட்டார். அதுபோல ‘சாரல்’ படம் எனக்கு நல்ல பெயரை பெற்றுத்தரும் என்ற நம்பிக்கை இருக்கிறது’’ என்றார்.

அமலாபால் இடத்தை பிடிப்பீர்களா? என்று கேட்டபோது, ‘‘அவர் இப்போது சினிமாவில் நடிக்கவில்லை. எனவே அவரது இடத்தை பிடிக்க முயற்சி செய்வேன்’’ என்று கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online