மிஷ்கினின் புதிய படம் – ‘ஏ’ க்கத்தில் இளைஞர்கள்

526x297-3yh“என்னுடைய படத்தை யாரும் குடும்பத்தோடு பார்க்க வேண்டாம், குழந்தைகள் பார்க்க வேண்டாம். அடுத்தப் படத்தை அடல்ஸ் ஒன்லியாகத்தான் எடுக்கப் போகிறேன்” என்று மிஷ்கின் சமீபத்தில் ஆர்ப்பரித்தார்.

இந்த அறிவிப்புக்குப் பிறகு இளைஞர்கள் மத்தியில் மிஷ்கின் படத்துக்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. பலவீனம் பார்த்து அடிச்சிருக்கார்யா என்று மிஷ்கினுக்கு பல்திசையிலிருந்தும் பாராட்டுகள்.

சவரக்கத்தி என்ற படத்தை தயாரித்து நடித்து வருகிறார் மிஷ்கின். அறிமுக இயக்குனரின் இந்தப் படத்தில் ராம் நாயகன். இந்நிலையில், தான் இயக்கும் அடுத்தப் படத்துக்கான வேலைகளில் மிஷ்கின் தீவிரமாகியுள்ளார்.

டிரான்ஸ்வேர்ல்ட் டெலி கம்யூனிகேஷன்ஸ் என்ற நிறுவனம் மிஷ்கினின் படத்தை தயாரிக்கிறது. ஷ்யாம் என்ற புதுமுகம் நாயகன். பிற கலைஞர்கள் தேர்வு நடந்து வருகிறது.

அடுத்தப்படம் அடல்ஸ் ஒன்லி என்றதால் இளைஞர் சமூகத்தில் மிஷ்கின் படத்துக்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries