டார்லிங் – 2, ஏம்பா இப்படி ஏமாத்துறீங்க…?

1442821436-8629பெயரை வைத்து பில்டப் தருவதே நம்மவர்களின் வேலையாகிவிட்டது.பொதுவாக ஒரு கதையில் நடித்தவர்கள் அதே கதாபாத்திரத்தை அப்படியே தொடர்ந்தால் மட்டுமே, பார்ட் 2, 3 என்று பெயர் வைப்பார்கள். ஆனால், தமிழில்…?

ஹைக்கூ என்று ஒரு படம். அந்தப் பெயருக்கு வரிச்சலுகை கிடையாது என்றதும், பசங்க 2 என பெயர் வைத்தனர்.

பசங்க படத்தை இயக்கிய பாண்டிராஜ் மீண்டும் குழந்தைகளை வைத்து இயக்கியிருக்கும் படம் என்பதைத் தவிர்த்து பசங்க படத்துக்கும், பசங்க 2 என பெயர் வைக்கப்பட்டிருக்கும் ஹைக்கூ படத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது.

இதாவது பரவாயில்லை. கோ படத்துக்கும் கோ 2 படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நடிகர்கள், கதை எல்லாமே வேறு. தயாரிப்பாளர் ஒருவரே என்பதால் கோ 2 என பெயர் வைத்துள்ளனர்.

இந்த வரிசையில் இப்போது, டார்லிங் 2. ஜின் என்ற பெயரில் ஒரு படம் தயாரானது அல்லவா? அந்தப் படத்தை ஞானவேல்ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் வாங்கியுள்ளது.

அவர்கள் தயாரிப்பில் இந்த வருடம் வெளிவந்து வெற்றி பெற்ற படம், டார்லிங். அந்தப் பெயர் பிரபலமாகிவிட்டதால் ஜின் படத்தின் பெயரை டார்லிங் 2 என மாற்றிவிட்டனர்.

டார்லிங்கின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்று யாராவது நம்பி வந்தால் தொலைந்தார்கள். ஏம்பா இப்படி பண்றீங்க…?

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries