என்னை நம்பிய முதல் ஹீரோ விஜய்: மோகன் ராஜா

vijays-37th-birthday-celebration-stills_23_130745123ரீமேக் படங்களை இயக்கி வெற்றிகண்டு வந்த மோகன் ராஜா, தற்போது ரீமேக் செய்யாமல் நேரடியாக ‘தனி ஒருவன்’ படத்தை இயக்கி வெற்றி கண்டிருக்கிறார். இவர் இயக்கிய இப்படத்தை பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்ய பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இதுவரை மோகன் ராஜா தமிழில் ஏழு படங்களை இயக்கியிருக்கிறார். இதில் ஆறு படங்களில் ஜெயம் ரவி நடித்திருக்கிறார். ‘வேலாயுதம்’ படத்தில் விஜய் நடித்திருந்தார். இவர்கள் கூட்டணியில் வெளியான இப்படத்தை ரசிகர்கள் பெருமளவில் ஆதரித்தனர்.

தற்போது விஜய் நடித்துள்ள ‘புலி’ படம் அடுத்த வாரம் வெளியாவதையொட்டி, இப்படம் வெற்றியடைய மோகன் ராஜா வாழ்த்துக்கள் கூறியிருக்கிறார்.

‘எப்போதும் வெற்றிப் படங்களை கொடுக்கும் என்னை உலகம் நம்புவதற்குமுன் என்னை நம்பிய முதல் ஹீரோவான விஜய்யின் ‘புலி’ படம் வெற்றியடைய வாழ்த்துக்கள், என்று அவர் கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online