சிங்கப்பூர் தமிழ் படம் இந்தியாவில் 150 தியேட்டர்களில் ரிலீஸ்

Unakkenna-Venum-Solluஸ்ரீநாத் ராமலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள படம், உனக்கென்ன வேணும் சொல்லு.

சிங்கப்பூர்-தமிழ்நாட்டை சேர்ந்த 2 குடும்பங்களிடையே பல்வேறு அதிசய சம்பவங்கள், தந்தை-மகள் உறவை மையப்படுத்தி உருவாகியிருக்கும் இந்த திகில் படம் இன்று சென்னை, மைசூர் மற்றும் கேரளாவில் 150 தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

சிங்கப்பூரில் நாளை ரிலீஸ் ஆகிறது. இதுதவிர தெலுங்கில் டப்பிங் செய்து ஆந்திராவில் ரிலீஸ் செய்ய உள்ளனர்.

இப்படத்தில் தீபக் பரமேஷ் நாயகனாகவும், ஜாக்லின் பிரகாஷ் நாயகியாகவும் அறிமுகமாகிறார்கள். இவர்களுடன் சிங்கப்பூர் குணாளன் மோகன், மோர்ணா அனிதா ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் அனு என்ற சிறுமி நடித்துள்ளார். அனைவரும் புதுமுகங்கள்.

இப்படத்தின் தயாரிப்புக்காக சிங்கப்பூரின் ஊடக வளர்ச்சி ஆணையம், 39 ஆயிரம் சிங்கப்பூர் டாலர்களை வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries