ஆஹா அந்த உண்மை சிம்புக்கும் தெரிஞ்சுப் போச்சே…

simbu_640x480_71423122533ஃபேஸ்புக், ட்விட்டர் எல்லாம் சும்மா மச்சி. உருப்படியா வேலை செய்யாம பொழுதுபோக்குறவனோட வேலை என்று அவ்வப்போது யாராவது இந்த பேருண்மையை போட்டுடைப்பது உண்டு.

சிம்புக்கும் அந்த உண்மை தெரிஞ்சு போச்சி என்பதுதான் இன்றைய ஹாட் டாபிக்.

என்ன விஷயம் என்றாலும், ட்விட்டர் பக்கத்தில் கருத்தோ, பதிலோ சொல்வது சிம்புவின் வழக்கம்.

என்னை அறிந்தால் படத்தை விமர்சிப்பவர்கள் மனநலம் தவறியவர்கள் என்ற பொன்மொழியை ட்விட்டரில்தான் சிம்பு உதிர்த்தார். அதற்காக அவர் கஷாயம் காய்ச்சப்பட்டது அறிந்ததே.

இந்நிலையில், நடிகனாக என்னுடைய கடமை ரசிகர்களுக்கு நல்ல தரமான படங்களை தருவதுதான். ட்விட்டரில் பேசுறது இல்லை. இனி அந்த வேலையை என்னுடைய ரசிகர்மன்ற நிர்வாகிகள் கவனித்துக் கொள்வார்கள் என ட்விட்டரிலிருந்து தற்காலிகமாக விலகிக் கொண்டுள்ளார்.

இப்படியே எல்லோரும் உண்மை தெரிஞ்சி விலகுனா என்டர்டெய்ன்மெண்டுக்கு நாங்க எங்கத்தான் போறதாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online