பிட்டு படத்தை ஹிட்டு படமாக்கிய ஆதிக் ரவிச்சந்திரன்

1442987952-6834த்ரிஷா இல்லனா நயன்தாரா படத்தை பார்த்தவர்களும், பார்க்காதவர்களும் அப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனைதான் தேடிக் கொண்டிருக்கிறார்கள். பிட்டு படத்தை ஹிட்டு படமாக்கியவராச்சே.

இந்தப் பொண்ணு செட்டாகலையா? அந்தப் பொண்ணை டாவடி – இதுதான் கதை என்று முடிவானதும் ஆதிக் பிடிச்சார் பாருங்க ஒரு டைட்டில், த்ரிஷா இல்லனா நயன்தாரா. ஸ்டார் நடிகைகள் இன்றியே இந்த டைட்டிலால் படத்துக்கு ஒரு ஸ்டார் பவர் கிடைத்தது.

அதன் பிறகு, பெண்களை பிட்டுப் படம் என்று பாடல் வைத்ததற்காக மகளிர் அமைப்பு கொடி பிடிக்கிறது என்று அவரே ஒரு வதந்தியை கொளுத்திப்போட்டு விளம்பர குளிர்காய்ந்தார். பிறகு ஜீ.வி.பிரகாஷ் மனிஷாவை 38 முறை முத்தமிட்டார் என இன்னொரு எச்சில் வதந்தி.

இப்படி, படம் வெளிவரும் முன்பே இளைஞர்கள் மனதில் ஒரு எதிர்பார்ப்பையும், ஏக்கத்தையும் கச்சிதமாக உருவாக்கினார். பருவமழைக்கு முன்பு நிலத்தை பக்குவப்படுத்துவது இல்லையா, அது மாதிரி.

படம் இப்போது அத்தனை வசவுகளுடனும் வெற்றிகரமாக ஓடுகிறது. அடுத்தப் படத்தை நமக்கு இயக்குவாரா என்று ஒவ்வொரு தயாரிப்பாளருக்கும் நப்பாசை.

30 சதவீத வரிச்சலுகைக்கு ஆசைப்பட்டு குடும்ப குத்துவிளக்காக படம் எடுப்பவர்களின் அகக்கண்ணை இந்தப் படம் திறந்திருக்கிறது. 30 சதவீதத்துக்கு ஆசைப்பட்டு மொத்தத்தையும் இழந்திட்டோமே. ஏ கிடைச்சா என்ன எடுடா படத்தை கிளாமரா என்று களத்தில் இறங்கியிருக்கிறார்கள்.

என்னவாகப் போகிறதோ.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online