தமிழ் ரசிகர்களுக்கு விருந்து படைக்க வரும் புரூஸ் லீ 2

ram-charan-sexy-photos-0165தமிழ் படங்களுக்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதனால் பல தமிழ் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு ரிலீசாகி வருகிறது.

அதுபோல், தெலுங்கு படமும் தற்போது தமிழ் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. சமீபத்தில் மகேஷ் பாபு நடித்த ‘ஸ்ரீமந்துடு’ படம் தமிழில் ‘செல்வந்தன்’ என்னும் பெயரில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது மகேஷ் பாபுவை தொடர்ந்து ராம் சரண் நடிக்கும் ‘புரூஸ் லீ’ படம் தமிழில் ‘புரூஸ் லீ 2’ என்ற பெயரில் டப் செய்து வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் ராம் சரணுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத்தி நடித்திருக்கிறார். மேலும் ‘என்னை அறிந்தால்’ படத்திற்குப் பிறகு அருண் விஜய் இப்படத்தில் வில்லன் வேடத்தில் நடித்திருக்கிறார். இவர்களுடன் அமிதாஸ், நதியா, சம்பத், சாயாஜி ஷிண்டே உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் அக்டோபர் 7ம் தேதி நடக்க இருக்கிறது. இதில் சிரஞ்சீவி, ராம் சரண் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொள்ள இருக்கின்றனர். இப்படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார்.

தமிழில் விவேகா பாடல்கள் எழுதியிருக்கிறார். ஏ.ஆர்.கே.ராஜாராஜா இப்படத்தை தமிழாக்கம் செய்திருக்கிறார். மகேஷ் பாபுவின் ‘செல்வந்தன்’ படத்தை வெளியிட்ட பத்ரகாளி பட நிறுவனம் இப்படத்தை வெளியிடுகிறது.

தமிழாக்கம் செய்த ராஜாராஜா இப்படத்தை பற்றி கூறும்போது, இப்படத்தின் டைட்டிலுக்கு ஏற்ப நிறைய சண்டைக்காட்சிகள், ஐந்து பாடல்கள் படத்தில் இருக்கின்றன.

ரசிகர்கள் விரும்பும் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியிருக்கிறது. ராம் சரண் படங்களுக்கு தமிழில் வரவேற்பு இருக்கிறது. மேலும் புரூஸ் லீ என்று தலைப்பு இருப்பதால் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

பத்ரகாளி நிறுவனர் கூறும்போது, ‘1986ம் ஆண்டும் சிரஞ்சீவி நடித்த படத்தை தமிழாக்கம் செய்து வெளியிட்டேன். தற்போது ராம் சரண் நடிக்கும் படங்களை வெளியிடுகிறேன். அடுத்த தலைமுறை படங்களை வெளியிடுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்’ என்றார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries