இனி கவர்ச்சியாக நடிக்க மாட்டேன்: சோனா

sonaஏராளமான படங்களில் கவர்ச்சிகரமான வேடத்தில் நடித்தவர் சோனா. இடையில் சில காலம் நடிப்பதை விட்டு விலகி இருந்த இவர், தற்போது ஒரு தீர்க்கமான முடிவுடன் மீண்டும் திரையுலகில் நுழைந்துள்ளார். இனி கவர்ச்சிப் பக்கம் கால் வைக்கப்போவதில்லை என்பதுதான் அந்த முடிவு.

“அப்படி இப்படி என்று கவர்ச்சியை காட்டி 75 படங்களுக்கு மேல் நடித்து விட்டேன். எல்லா மொழிகளிலுமே எல்லாப் பிரபல நடிகர்களுடனும் நடித்திருக்கிறேன். கவர்ச்சியாக நடித்து எனக்கே போரடித்து விட்டது. இனி அப்படி இப்படி நடிப்பதில்லை என முடிவெடுத்திருக்கிறேன். கேரக்டர் ரோலில் மட்டுமே நடிக்க முடுவெடுத்திருக்கிறேன்.

கதை எழுதுவதற்கு முன்பு பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கிற நீங்கள், குணசித்திர கேரக்டர்ன்னு வரும்போது சோனா என்று எழுதி என்னை அழையுங்கள், நான் நல்ல கேரக்டர்களில் நடிக்க காத்திருக்கிறேன்” என்கிறார் சோனா.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries