டைவர்ஸ் செய்த முருகதாஸை வாழ்த்திய சமந்தா!

samantha-on-vijay-610x330‘துப்பாக்கி’, ‘கத்தி’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை இயக்கிய இயக்குனர் முருகதாஸ் தன்னுடைய பிறந்தநாளை இன்று கொண்டாடினார். இவருக்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். நடிகை சமந்தாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

‘நீங்க என்னை டைவர்ஸ் பண்ணியிருந்தலும் நான் உங்களை காதலிக்கிறேன். பிறந்தநாள் வாழ்த்துக்கள்’ என்று சமந்தா டுவிட் செய்துள்ளார். இதற்கு முருகதாஸ், ‘நீ எப்போதும் என்னுடைய ஸ்வீட் ஹார்ட்’ என்றும் பதிலளித்திருக்கிறார்.

முருகதாஸ் இயக்கிய ‘கத்தி’ படத்திற்குப் பிறகு முருகதாஸ் தயாரிக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள’ படத்தில் சமந்தா கதாநாயகியாக நடித்து வருகிறார். விக்ரம் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை விஜய் மில்டன் இயக்கியிருக்கிறார். சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இப்படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

அப்போது முருகதாஸ் இயக்கும் இந்தி படத்தில் சமந்தாவை ஏன் கதாநாயகியாக்கவில்லை? என்று கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த முருகதாஸ், ‘நான் சமந்தாவை டைவர்ஸ் செய்துவிட்டேன்’ என விளையாட்டாக கூறியிருக்கிறார். இதை மனதில் வைத்துக்கொண்டு தான் சமந்தா இப்படி ஒரு வாழ்த்தை கூறியிருக்கிறார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries