விஜய் சேதுபதியின் காதலும் கடந்து போகும் கதை தெரியுமா?

1443184834-7423சூது கவ்வும் நலன் குமாரசாமியின் இயக்கத்தில், காதலும் கடந்து போகும் படத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.

சூது கவ்வும் படத்தை முடித்த உடன், கொரியன் படம் ஒன்றின் ரீமேக் உரிமையை நலன் குமாரசாமி வாங்கினார். சூர்யாவை அதில் நடிக்க வைப்பதாக திட்டம். எஸ்கிமோ காதல் என படத்துக்கு பெயரிட்டனர். படத்தை சூர்யாவும் பார்த்தார். ஹீரோயிசம் குறைவாக இருந்ததால் அவர் அதில் நடிக்கவில்லை.

சூர்யா நடிக்க மறுத்த அந்த கொரியப் படத்தின் தழுவல்தான், விஜய் சேதுபதி நடிப்பில், காதலும் கடந்து போகும் என்ற பெயரில் தயாராகிறது.

ஓய்வு பெறும் வயதில் இருக்கும் கேங்ஸ்டரை இளம் பெண் ஒருவர் காதலிக்கிறாள். இதுதான் கொரியப் படத்தின் ஒன் லைன். அதைத்தான் காதலும் கடந்து போகும் என்ற பெயரில் விஜய் சேதுபதியை வைத்து எடுக்கின்றனர்.

கேங்ஸ்டராக விஜய் சேதுபதியும், அவரைக் காதலிக்கும் இளம்பெண்ணாக மடோனாவும் நடிக்கின்றனர். பாப் மடோனா இல்லை, மலையாளப் படத்தில் நடிக்கும் மடோனா.

திருக்குமரன் என்டர்டெய்ன்மெண்டும், ஸ்டுடியோ கிரீனும் இணைந்து படத்தை தயாரிக்கின்றன.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries