புரூஸ் லீயில் ஜி.வி.பிரகாஷுடன் இணையும் கீர்த்தி

GV-BruceLee-Movie‘டார்லிங்’ படம் மூலம் நாயகனான ஜி.வி.பிரகாஷுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்பு வந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படம் எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்தாலும் இளைஞர்களிடையே அமோக ஆதரவு பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

இந்த உற்சாகத்துடன் ஜி.வி. தன்னுடைய அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். பசங்க பாண்டிராஜின் உதவி இயக்குனர் பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கும் ‘புரூஸ் லீ’ படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தை கெனன்யா பிலிம்ஸ் தயாரிக்கிறது.

நெடு நாட்களாக இப்படத்திற்கு ஹீரோயின் வேட்டை நடைபெற்று வந்தது. நயன்தாரா, எமி ஜாக்சன், சமந்தா நடிக்கக்கூடும் என்று பல பெயர்கள் அடிப்பட்டு நிலையில் தற்போது கீர்த்தி கர்பந்தா என்பவர் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கீர்த்தி ‘போனி’ என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். மேலும் 20க்கும் மேற்பட்ட தெலுங்கு, கன்னட படங்களில் நடித்துள்ளார். தற்போது ‘புரூஸ் லீ’ படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.

நவம்பரில் இதன் படப்பிடிப்பு துவங்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் காதலர் தின ஸ்பெஷலாக படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries