சென்னை விமான நிலையத்தில் நடந்த கபாலி படப்பிடிப்பு

1443269043-2921சென்னை விமான நிலையத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கபாலி’ படப்பிடிப்பு நேற்று நடந்தது. விமான நிலையத்தின் வெளிநாட்டு முனையத்தில் நடைபெற்ற காட்சியில் ரஜினிகாந்த் நடித்த முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன.

விநாயகர் சதுர்த்தி அன்று படப்பூஜை சென்னையில் உள்ள ரஷ்யன் கல்ச்சர் மையத்தில் நடைபெற்றது. படப்பிடிப்பு தற்போது சென்னை சுற்றி வேகமாக நடந்து வருகிறது.

சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலிலும், வடபழனி மோகன் ஸ்டியோவிலும் பெரும்பாலன காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் தனது மகளுடன் மலேசியாவிற்கு செல்வது போன்ற காட்சிகளை நேற்று இயக்குனர் பா.ரஞ்சித் படமாக்கினார்.

ஆயிரக்கணக்கான பயணிகள் கூடும் சென்னை சர்வதேச விமான நிலையத்தில், சிறப்பு அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தினர். மேலும், படப்பிடிப்பை காண ஏராளமான ரசிகர்களும், பயணிகளும் கூடி நின்றார்கள்.

அப்பொழுது, திடீரென ரஜினிகாந்த் காரில் வந்து இறங்கியதும் அங்கு இருந்த பயணிகளும், ரசிகர்களும் ஆரவாரம் செய்தார்கள். பயணிகள் வேடத்தில் நூற்றுக்கணக்கான வெளிநாட்டு துணை நடிகர்- நடிகைகள் நடித்தனர்.

தொடர்ந்து மயிலாப்பூர், பூந்தமல்லி, வடபழனி போன்ற இடங்களில் படப்பிடிப்பை நடத்த உள்ளனர். அடுத்த மாதம் மலேசியா செல்ல உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries