சினிமாவில் என் திறமை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை: ஸ்ரேயா வருத்தம்

shriya saran photosதமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருந்தவர் ஸ்ரேயா. இவர் அறிமுகமான முதல் தமிழ் படம், ‘எனக்கு 20 உனக்கு 18’. இந்த படம் 2003-ல் வந்தது. ஜெயம் ரவியுடன் நடித்த ‘மழை’ படம் மேலும் அவரை பிரபலப்படுத்தியது. ‘சிவாஜி’ படத்தில் ரஜினிகாந்த் ஜோடியாக நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார்.

இந்த படத்துக்கு பின் அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தன. விஜய், விக்ரம், விஷால், தனுஷ், ஜீவா என பெரிய கதாநாயகர்களுடன் நடித்தார். தமிழில் கடைசியாக நடித்த ‘ரவுத்திரம்’ படம் 2011-ல் வந்தது. அதன்பிறகு இவருக்கு படங்கள் இல்லை. ‘ராஜபாட்டை’யில் ஒரு பாடலுக்கு மட்டும் ஆடிவிட்டுப்போனார்.

தெலுங்கில் நடித்த ‘பவித்ரா’, கன்னடத்தில் நடித்த ‘சந்திரா’ படங்களை தமிழிலும் மொழி மாற்றம் செய்து வெளியிட்டனர். இந்தியில் தயாரான ‘திரிஷ்யம்’ படத்தில் அஜய் தேவ்கான் ஜோடியாக நடித்தார். இந்த படம், சமீபத்தில் வெளியாகி தோல்வி அடைந்தது. அதனால் ‘மார்க்கெட்’டை தக்கவைக்க ஸ்ரேயா போராடி வருகிறார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:-

“நான் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நிறைய படங்களில் நடித்துவிட்டேன். நல்ல கதாபாத்திரங்கள் அமைந்தன. ஆனாலும் எனது திறமை முழுமையாக இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை.

‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் ஸ்ரீதேவி நடித்தது போன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்துவிட வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. அதுபோல், ‘பாகுபலி’ படத்தில் அனுஷ்கா நடித்ததுபோன்ற வேடத்தில் நடிக்கவும் விரும்புகிறேன்”.

இவ்வாறு ஸ்ரேயா கூறினார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries