வல்லவனுக்கு வல்லவனாக மாறிய பாபி சிம்ஹா

Simhaசிறுசிறு வேடங்களில் நடித்து வந்த பாபி சிம்ஹா, ‘ஜிகர்தண்டா’ படத்தில் வில்லனாக நடித்தார். இதில் இவருடைய நடிப்பு அனைவராலும் வரவேற்கப்பட்டது. இப்படத்தில் சிறந்த நடிப்பிற்காக இவருக்கு தேசிய விருது கிடைத்தது.

இதன் மூலம் அவர் புகழின் உச்சிக்கு சென்றார். பாபி சிம்ஹா ஜிகர்தண்டா படத்தில் அசால்ட் சேது என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தற்போது இவர் பல படங்களில் நடித்து வருகிறார்.

தனக்கு நல்ல பெயர் பெற்றுத்தந்த அசால்ட் என்ற பெயரில் தற்போது தயாரிப்பு நிறுவனம் தொடங்கியிருக்கிறார் பாபி சிம்ஹா. இந்நிறுவனம் ‘வல்லவனுக்கு வல்லவன்’ என்ற பெயரில் படம் தயாரிக்க இருக்கிறார். இந்த தலைப்பில் ஏற்கனவே ஜெமினி கணேசன் படம் வெளியாகியிருக்கிறது.

இதில் நாயகனாக பாபி சிம்ஹாவே நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக ‘நெடுஞ்சாலை’ படத்தில் நடித்த ஷிவதா நாயர் நடிக்கிறார். இப்படத்தை விஜய் தேசிங்கு இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் மாதம் தொடங்க இருக்கிறது.

பாபி சிம்ஹா நடிப்பில் ‘மசாலா படம்’, ‘உறுமீன்’, ‘பாம்பு சட்டை’, ‘இறவி’, ‘கவலை வேண்டாம்’ ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries