கபாலி படப்பிடிப்பில் பிறந்தநாளை கொண்டாடிய அட்டக்கத்தி தினேஷ்

Dinesh-800x400‘அட்டக்கத்தி’ படத்தின் மூலம் கதாநாயகனாக உருவெடுத்தவர் தினேஷ். இந்த படத்தின் மூலம் இவரது பெயருக்கு முன் ‘அட்டக்கத்தி’ என்ற பெயரும் ஒட்டிக்கொண்டது. தமிழ் சினிமாவில் இவரை பலரும் ‘அட்டக்கத்தி’ தினேஷ் என்றே அழைத்து வருகின்றனர்.

இவருக்கு இன்று பிறந்தநாளாகும். இவர் தனது பிறந்தநாளை தற்போது நடித்து வரும் ‘கபாலி’ படக்குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடினார்.

இயக்குனர் பா.ரஞ்சித், கலையரசன் மற்றும் படக்குழுவினர் தினேஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறினர். தினேஷ் இப்படத்தில் வித்தியாசமான தோற்றத்தில் நடித்து வருகிறார்.

‘கபாலி’ படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராதிகா ஆப்தே, தன்ஷிகா, கலையரசன், ரித்விகா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். கலைப்புலி எஸ்.தாணு பிரம்மாண்டமாக தயாரிக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries