கத்துக்குட்டி படத்தில் அஜீத் ரசிகராக‌ நரேன்! ‘புலி’யோடு மோதும் பின்னணி

1443427378-89”இன்றைய தலைமுறைக்குத் தேவையான நல்ல விஷயங்களைச் சொல்லி இருக்கிறோம். அதனால்தான் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு ‘கத்துக்குட்டி’ படத்தை வெளியிடுகிறோமே தவிர, ‘புலி’ படத்துடன் மோதும் நோக்கம் இல்லை!” என பிரஸ்மீட்டில் ‘கத்துக்குட்டி’ படக்குழு அறிவித்தது.

ஆனால், ‘புலியுடன் திட்டமிட்டு மோதுகிறது கத்துக்குட்டி’ என்கிற தகவல் தற்போது கசிந்திருக்கிறது. காரணம், ‘கத்துக்குட்டி’ படத்தில் அஜீத்குமாரின் தீவிர ரசிகராக நடித்திருக்கிறார் நரேன்.

அஜீத்குமார் நடிக்கும் படக் காட்சிகளை விரும்பிப் பார்க்கும் தீவிர ரசிகராகவும் அஜீத் வசனங்களைச் சொல்லி அசத்துபவராகவும் நடித்திருக்கிறார் நரேன். படத்தின் ஆரம்பத்திலும் அஜீத்குமார் பெயருடனேயே கிராமியக் காட்சிகள் ஆரம்பிப்பதாகவும் உறுதியான தகவல்கள் வெளிவருகின்றன.

குறிப்பாக ‘வீரம்’ படத்தில் விவசாயத்துக்கும் கூலித் தொழிலாளர்களுக்கும் ஆதரவாக அஜீத் பேசுகிற வசனங்கள் ‘கத்துக்குட்டி’ படத்தின் திருப்புமுனை காட்சியாக அமைந்திருக்கின்றன. ‘கத்துக்குட்டி’ படக்குழு சமீபத்தில் பிரிவியூ காட்சி ரெடி செய்தபோதுதான் இந்த விஷயங்கள் அம்பலமாகி இருக்கின்றன.

‘ருத்ரமாதேவி’, ‘மாப்ள சிங்கம்’ உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் படங்களே ‘புலி’க்கு எதிராகப் போட்டியில் குதிக்காத நிலையில், ‘கத்துக்குட்டி’ படம் எப்படி தைரியமாகக் களமிறங்குகிறது என்கிற கேள்வி பலமாக அலையடித்தது.

அஜீத் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் வசனங்களையும் முன்னிறுத்தி வருவதாலேயே திட்டமிட்டு ‘புலி’ படத்துடன் கத்துக்குட்டி களமிறக்கப்படுகிறது என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகிவிட்டது. இனி… விஜய் ரசிகர்கள் ‘கத்துக்குட்டி’யை எப்படி வெளுக்கப் போகிறார்கள் என்பதைச் சொல்ல வேண்டுமா என்ன?

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries