தாரை தப்பட்டை டப்பிங் பணியில் தீவிரம் காட்டும் வரலட்சுமி

Varalakshmi-Sarathkumar-Tharai-Thappattai-‘பரதேசி’ படத்திற்கு பிறகு பாலா தற்போது ‘தாரை தப்பட்டை’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தில் சசிகுமார் கதாநாயகனாகவும், வரலட்சுமி கதாநாயகியாகவும் நடித்து வருகின்றனர்.

இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இது, இவர் இசையமைக்கும் ஆயிரமாவது படமாகும். பாலா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான பி ஸ்டுடியோஸ் மூலம் தயாரித்துள்ளார்.

கரகாட்டம் சம்பந்தப்பட்ட கதையை மையப்படுத்தி உருவாகி வரும், இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து படத்தின் பின்னணி வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாயகியான வரலட்சுமி, படத்தின் டப்பிங் பணிகளில் தீவிரம் காண்பித்து வருகிறார். இவர் சம்மந்தப்பட்ட காட்சிகளில் விறுவிறுப்பாக டப்பிங் கொடுத்து வருகிறார். இவர் டப்பிங் கொடுப்பதுபோல் உள்ள காட்சிகளை தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்திருக்கிறார்.

விரைவில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர்களை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries