காஜல் அகர்வாலுடன் மோதும் ராகுல் பிரீத்சிங்

images-rakul-preet-singh-tamanna-kajalதமிழ், தெலுங்கு பட உலகில் முக்கிய இடம் பிடித்திருப்பவர் காஜல் அகர்வால். தெலுங்கு படஉலகில் இவருக்கு கடும் போட்டியாக உருவாகி இருப்பவர் ராகுல் பிரீத்சிங்.

தமிழில் ‘புத்தகம்’, ‘என்னவோ ஏதோ’ படங்களில் பிரீத்சிங் நடித்திருக்கிறார். இவருக்கு தெலுங்கில் இப்போது நல்ல மார்க்கெட் இருக்கிறது. முக்கியமான தெலுங்கு ஹீரோக்களின் ஜோடியாக நடித்து வருகிறார். அடுத்து ராம்சரணுடன் ‘புரூஸ்லி’ திரைப்படத்தில் பிரீத்சிங் நடிக்கிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

தமிழில் ‘புரூஸ்லீ–2 தினபட்சர்’ என்ற பெயரில் இந்த படம் வெளியாக இருக்கிறது. இதில் பிரீத்திசிங் அதிக கவர்ச்சி காட்டி நடித்துள்ளார்.

புரூஸ்லி படத்தில் ராமசரண் ஜோடியாக காஜல் அகர்வால் நடிப்பதாக இருந்தது. இதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டு இருந்தபோதே அந்த படத்துக்கு பிரீத் சிங் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் காஜல் அகர்வால் அதிர்ச்சி அடைந்தார்.

தெலுங்கு பட உலகில் காஜல் அகர்வாலுக்கு போட்டியாக பிரீத்சிங் உருவாகி இருக்கிறார் என்று தெலுங்கு படகில் பரபரப்பாக பேசப்படுகிறது. அதற்கு ஏற்ப பிரீத்சிங்குக்கு தெலுங்கு பட வாய்ப்புகள் அதிகமாகி வருகிறது. இது காஜல் அகர்வாலுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries