கொலை மிரட்டல் விடுத்ததாக வடிவேலு மீது தயாரிப்பாளர் புகார்

002நடிகர் வடிவேலு நடித்த ‘எலி’ படத்தின் தயாரிப்பாளர் ஜி.சதீஷ்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், கமிஷனர் ஜார்ஜை சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

நான் ‘சிட்டி சினி கிரியேஷன்ஸ்’ நிறுவனத்தின் பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறேன். என்னிடம் நடிகர் வடிவேலு, ‘தான் ‘எலி’ திரைப்படத்தில் நடித்து வருகிறேன்.

இப்படத்தின் தயாரிப்பாளரான ராம்குமார் சரிவர படத்துக்கு செலவு செய்யமுடியாத நிலையில் இருக்கிறார். எனவே ‘எலி’ படத்தை உங்கள் நிறுவனம் தயாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நானும், நடிகர் வடிவேலுவும் நீண்டகால நண்பர்கள் என்பதால் படத்தை தயாரிக்க ஒப்புக்கொண்டேன். படப்பிடிப்பு வேலைகள் பாதிக்கு மேல் நடந்து கொண்டிருந்தபோது, நடிகர் வடிவேலுவும், படத்தின் இயக்குனர் யுவராஜ் ஆகியோர் கூறிய ‘பட்ஜெட்’ தொகை ரூ.14 கோடியை தாண்டி விட்டது.

வடிவேலுவின் பேச்சை நம்பி ரூ.17 கோடியை முதலீடு செய்தபின்னும், படம் சரிவர ஓடவில்லை. இதனால் எனக்கு ரூ.9.20 கோடி நஷ்டம் ஏற்பட்டுவிட்டது. படம் சரியாக ஓடாததால் ஒரு சில தியேட்டர் உரிமையாளர்களும், வினியோகஸ்தர்களும் போலியான கணக்கை காண்பித்து என்னிடம் கந்துவட்டி போட்டு பணத்தை கேட்டு மிரட்டுகின்றனர்.

இந்தநிலையில் மீண்டும் நடிகர் வடிவேலு, முன்னாள் தயாரிப்பாளர் ராம்குமாருக்கு ரூ.90 லட்சம் கொடுக்க வேண்டும் என்று அடையாளம் தெரியாத 6 பேர் காசோலையை என்னிடமிருந்து மிரட்டியும், கட்டாயப்படுத்தியும் வாங்கியதோடு, தொடர்ந்து கொலைமிரட்டல் விடுக்கின்றனர்.

இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான நான் என்னுடைய சூழ்நிலைகளை நடிகர் வடிவேலுவிடம் கூறியபோது, ‘அவரும், அவருடைய மானேஜர் பன்னீரும், கணக்காளர் முத்தையாவும் என்னை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு, இப்படத்தினால் ஏற்பட்ட நஷ்டத்தை தர முடியாது என்று மிரட்டும் தோனியில் பேசுவதோடு பணத்தை கொடுக்காமல் தொடர்ந்து ஏமாற்றி வருகின்றனர்.

நடிகர் வடிவேலுவினால் ஏற்பட்ட நஷ்டத்தை அவரிடமிருந்து பெற்று தருவதோடும், என்னை மிரட்டுகின்ற வடிவேலு உள்ளிட்டவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுத்து எனது உயிருக்கும், உடமைக்கும் உரிய பாதுகாப்பு தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries