எந்திரன் 2 படத்தில் நானா? – அப்படியே ஷாக்காயிட்டேன்

1397744800-422இப்படி சொல்லியிருப்பவர், பாலிவுட் நாயகி, தீபிகா படுகோன். எந்தரன் 2 பட வேலைகளில் ஷங்கர் பிஸியாக இருக்கிறார்.

ரஜினி நடிக்கும் இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய்க்குப் பதில் தீபிகா படுகோன், கத்ரினா இருவரில் ஒருவரை நடிக்க வைக்க ஷங்கர் தீர்மானித்துள்ளார்.

பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இதுபற்றி தீபிகாவிடம் கேட்டதற்குதான் இப்படியொரு அதிர்ச்சி ரியாக்ஷன் தந்திருக்கிறார்.

கோச்சடையான் படத்தில் நடித்தபோது, ரஜினி என்னை அவரது மகள்களில் ஒருவராகத்தான் என்னை பார்த்துக் கொண்டார். அவருடன் நடிக்க எப்போது வாய்ப்பு வந்தாலும் நடிக்க தயாராக இருக்கிறேன்.

எந்திரன் இரண்டாம் பாகத்தில் நடிப்பது குறித்து யாரும் என்னிடம் பேசவில்லை. ஷங்கர் என்னிடம் பேசினார் என்ற செய்தியை கேட்டு ஷாக்காயிட்டேன் என்றார்.

எந்திரனில் ரஜினி ஜோ‌டியாக நடிக்க தீபிகா தயார். ஷங்கர்தான் இனி முடிவு சொல்ல வேண்டும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online