சிவா இயக்கத்தில் சிவகார்த்திகேயன்?

Sivakarthikeyan-next-film-with-Director-Siva‘சிறுத்தை’, ‘வீரம்’ ஆகிய படங்களை தொடர்ந்து ‘சிறுத்தை’ சிவா தற்போது அஜித்தை வைத்து ‘வேதாளம்’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. வருகிற தீபாவளிக்கு படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்திற்கு பிறகு சிவா, சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப்போவதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அதாவது, ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களில் சிறுத்தை சிவாவின் மேக்கிங் ஸ்டைலை பார்த்து அசந்துபோன அஜித், தனக்காக மறுபடியும் ஒரு கதை தயார் செய்யும்படி சிறுத்தை சிவாவிடம் கூறினாராம்.

அதன்படி, ‘வேதாளம்’ படம் முடிந்த பிறகு அதற்கான பணிகளில் சிறுத்தை சிவா களமிறங்கப் போகிறாராம். அந்த படத்தை அடுத்த வருடத்தில்தான் தொடங்க இருக்கிறார்களாம்.

அதற்குள் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை ‘சிறுத்தை’ சிவா இயக்கிவிட முடிவு செய்துள்ளாராம். விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என தெரிகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries