டிசம்பர் 18 திரைக்கு வருகிறது கெத்து

ET00029964உதயநிதி நடித்துள்ள கெத்து படம் டிசம்பர் 18 திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருக்குமரன் இயக்கியிருக்கும் இந்த மென் ஆக்ஷன் படத்தின் வசனக்காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டன.

கடைசியா நடந்த கோவா ஷெட்யூடுடன் வசனக் காட்சிகள் முடிந்துவிட்டதாக படக்குழு தெரிவித்துள்ளது. இனி மூன்று பாடல் காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட வேண்டும்.

இந்தப் பாடல்காட்சிகளை விரைவில் படமாக்க திட்டமிட்டுள்ளனர். நிதானமாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை முடித்து டிசம்பர் 18 படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

உதயநிதியின் ரெட் ஜெயண்ட் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் உதயநிதியின் தந்தையாக சத்யராஜும், வில்லனாக விக்ராந்தும் நடித்துள்ளனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online