குழந்தையின் தலையை வெட்டும் கொடூர காட்சி! ‘புலி’க்கு வரிவிலக்கு மறுத்த பின்னணி

Puli-First-Look-Postersமிகுந்த போராட்டத்துக்குப் பிறகும் ‘புலி’ படத்துக்கு வரிவிலக்கு கொடுக்க மறுத்துவிட்டது தமிழக அரசு. படத்தில் அரசியல் சீண்டல்கள் நிறைய இருப்பதாகவும் அதனால்தான் வரிவிலக்கு மறுக்கப்படுவதாகவும் முதலில் சொல்லப்பட்டது.

ஆனால், வரிவிலக்கு குழுவினர் இதனை மறுத்திருக்கிறார்கள். படத்தில் வன்முறை காட்சிகள் அதிகம் இருப்பதால்தான் வரிவிலக்கு மறுக்கப்படுவதாக ‘புலி’ தரப்பிடம் விளக்கினார்கள் வரி விலக்கு குழுவினர். ‘புலி’ படத்தில் ஒரு அழகான குழந்தையின் தலையை வெட்டுவது போல் இருக்கிற காட்சியை வரிவிலக்கு குழு கடுமையாகக் கண்டித்திருக்கிறது.

‘நிஜத்தில் ஒருவரைக் கொன்றால்தான் கொலை என்று இல்லை. ஒரு குழந்தையைக் கொல்வது போன்ற கற்பனையும் மிகக் கொடூரமான கொலைதான்.

அதனால் அந்தக் காட்சியை உடனே நீக்குங்கள்’ எனச் சொன்னது வரிவிலக்குக் குழு. ஆனால், இயக்குநர் சிம்புதேவன் அந்தக் காட்சி படத்துக்கு முக்கியமானது; அதனை நீக்க முடியாது எனக் கறாராகச் சொல்லிவிட்டாராம்.

அதனால், வரிவிலக்கு உடனடியாக மறுக்கப்பட்டது. கூடவே, ‘இந்த மாதிரியான படங்களுக்கு எப்படி யு சர்டிபிகேட் கொடுத்தார்கள்’ என்கிற கேள்வியையும் வரிவிலக்கு குழு கேட்டிருக்கிறது.

‘புலி… குழந்தைகளுக்கான படம்’ என அனைவரும் ஆவலோடு காத்திருக்கையில் குழந்தையைக் கொல்லும் காட்சி படத்தில் இடம் பிடித்திருப்பது பலரையும் திகைப்பில் ஆழ்த்தி இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online