புலி படத்துக்கு தடை விதிக்கவில்லை: வருமான வரித்துறை விளக்கம்

Vijay-puliவருமான வரித்துறை அதிகாரிகளின் திடீர் சோதனை காரணமாக ‘புலி’ படம் திரையிடுவது தாமதம் ஆனது. இன்று அதிகாலை விஜய் ரசிகர்களுக்காக ‘புலி’ படத்தின் சிறப்பு காட்சிகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக ரசிகர்கள் பணம் செலுத்தி டிக்கெட்டு எடுத்து இருந்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு ‘புலி’ படத்தின் சிறப்பு காட்சி ரத்து செய்யப்படுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. டிக்கெட் பணமும் திருப்பி கொடுக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ரசிகர்கள் வருமான வரித்துறைக்கு எதிராக கோஷமிட்டனர். திட்டமிட்டே படத்தை நிறுத்திவிட்டதாக குற்றம் சாட்டினார்கள்.

வருமான வரித்துறையினர் ‘புலி’ படத்துக்கு தடை விதித்து விட்டதாக தகவல் பரவியது. இதனால் விஜய் ரசிகர்கள் பல்வேறு ஊர்களில் கலாட்டாவிலும் ஈடுபட்டனர். இந்த நிலையில், வருமான வரித்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். இதில் கூறி இருப்பதாவது:–

‘புலி’ படத்துக்கு வருமான வரித்துறை எந்தவித தடையும் விதிக்கவில்லை. வருமான வரித்துறையினர் வழக்கமான சோதனைகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளனர். ‘புலி’ படம் திரையிடப்படாததற்கும், வருமான வரித்துறைக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. எந்த தடையும் விதிக்கப்பட வில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

படத்தை ரிலீஸ் செய்வதற்கான அனுமதி மற்றும் தொழில்நுட்பம் தொடர்பாக ஏற்பட்ட தாமதம் காரணமாகவே ‘புலி’ படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாக தெரிகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online