விஜய், நயன்தாரா வீடுகளில் 2–வது நாளாக சோதனை

show_image_NpAdvHoverநடிகர் விஜய் நடித்த புலி படம் இன்று வெளியானது. இந்த படம் ரூ. 100 கோடி செலவில் பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நடிகர் விஜய் மற்றும் புலி திரைப்பட குழுவினர் வீடுகளில் வருமானவரித்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.

நடிகர் விஜய், நடிகைகள் நயன்தாரா, சமந்தா, தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார், சிபுதமீன், டைரக்டர் சிம்பு தேவன், பைனான்சியர், அன்பு செழியன் ஆகியோரது வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சென்னை ஐதாராபாத், கொச்சி ஆகிய நகரங்களில் 32 இடங்களில் வருமான வரித்துறையில் இந்த அதிரடி சோதனையை நடத்தினர்.

நடிகர் விஜய் வீட்டில் இன்று 2–வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். நேற்று காலை 8 மணிக்கு தொடங்கிய சோதனை இரவு வரை நடந்தது. தொடர்ந்து 2–வது நாளாக நீலாங்கரையில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது.

10 அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் போது வீட்டு கதவுகள் அனைத்தும் மூடப்பட்டன. வீட்டில் இருந்து யாரும் வெளியே செல்லவோ, வெளியில் உள்ளவர்கள் வீட்டுக்குள் வரவோ அனுமதிக்கப்படவில்லை.

இந்த சோதனையின் போது விஜய் முழு ஒத்துழைப்பு கொடுத்ததாக வருமான வரித்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதேபோல நடிகை நயன்தாராவின் வீடுகளில் இன்று 2–வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. கொச்சி வீட்டில் சோதனை நடந்தது. இதேபோல பைனான்சியர் அன்பு செழியன் வீட்டிலும் 2–வது நாளாக சோதனை நடத்தப்பட்டது.

நடிகை சமந்தாவுக்கு சொந்தமான சென்னை, ஐதாராபாத், வீடுகளில் சோதனை முடிவடைந்தது. இந்த சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் ஆவணங்களை மதிப்பீடு செய்யும் பணி தனியாக நடைபெற்று வருகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries