புரூஸ்லீயில் நடித்த சிரஞ்சீவி – புஸ்ஸான 150 -வது படம்

1443677500-4563சிரஞ்சீவி இதுவரை 149 படங்களில் நடித்துள்ளார். அரசியல் பக்கம் போனதால் 150 -வது படம் இன்னும் கைகூடவில்லை. ஏழு வருடங்களாக ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

அரசியல் ஆளை கவிழ்த்த பிறகு, நல்ல கதையிருந்தால் 150 -வது படத்தில் நடிப்பேன். நல்ல கதைக்கு ஒரு கோடி ரூபாய் தரப்படும் என சிரஞ்சீவி அறிவித்தார். அது நடந்து பல வருடங்கள் ஆகிறது.

இந்நிலையில், பூரி ஜென்நாத் இயக்கத்தில் சிரஞ்சீவி ஆட்டோ ஜானி என்ற படத்தில் நடிக்கப் போவதாக கூறினர். அப்படம் இன்னும் டேக் ஆஃப் ஆகவில்லை.

மெகா ஸ்டாரின் 150 -வது படம் எப்போது தொடங்கும் என்று ரசிகர்கள் காத்திருக்கையில், தனது மகன் ராம் சரண் தேஜா நடித்துள்ள புரூஸ் லீ படத்தில் சில நிமிடங்கள் தோன்றுகிறார் சிரஞ்சீவி. அப்படியானால், அதிகாரப்பூர்வமாக அவரது 150 -வது படம் புரூஸ்லீதான்.

பெரிசா எதிர்பார்த்தது இப்படி பொசுக்குன்னு போச்சே என ரசிகர்களுக்கு கவலை. பிள்ளை பாசத்துக்கு முன்னால் நூத்தியம்பதாவது இருநூறாவது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online