ரஜினி மகளாக நடிப்பது நான் செய்த பாக்கியம்: தன்ஷிகா

DHANISHIKA-CUTOUT_0_0ரஜினியின் கபாலி படப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது. சென்னை ஸ்டூடியோக்களிலும், சென்னை விமான நிலையம் ஆகியவற்றில் ஏற்கனவே படப்பிடிப்பு நடந்துள்ளது. தற்போது ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள செட்டிநாடு அரண்மனையில் ரஜினி பங்கேற்கும் காட்சிகள் படமாகி வருகின்றன.

ரஞ்சித் இயக்கத்தில் ராதிகா ஆப்தே நாயகியாக நடிக்கும் இந்த படத்தில் ரஜினியின் மகளாக தன்ஷிகா நடித்து வருகிறார். பேராண்மை, மாஞ்சாவேலு, அரவான், பரதேசி உள்பட பல படங்களில் நடித்திருந்தாலும் கதாநாயகி ஆகும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை.

ஆனால் ரஜினியுடன் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லையே என்று பிரபல ஹீரோயின்களே ஏங்கும்போது தன்ஷிகாவுக்கு ரஜினி படத்தில் அவரது மகளாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதுகுறித்து உள்ளம் நெகிழ தன்ஷிகா கூறுகிறார்…

ரஜினிசார் படத்தில் ஒரு சீனில் நடிக்க வாய்ப்பு கிடைக்காதா என்று நான் ஏங்கியது உண்டு. இப்போது அவரது மகளாக அவருடன் இணைந்து நடிப்பது நான் பெற்ற பாக்கியம். இதை விட பெருமை வேறு எதுவும் இல்லை.

இந்த படத்தில் எனது முடி அலங்காரம் வித்தியாசமாக உள்ளது. இதற்கு ஏற்றபடி முடியை குறைத்து இருக்கிறேன். கபாலி படத்தில் என்னை புதிய கோணத்தில் ரசிகர்கள் காணலாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries