பரத்துக்கு தாத்தாவாக நடிக்கும் பிரேம்ஜி

bharath-and-premji-amaren-team-up‘ஐந்தாம் தலைமுறை சித்த வைத்திய சிகாமணி’ படத்திற்குப் பிறகு பரத் தற்போது நடித்து வரும் படம் ‘சிம்பா’. இதில் பரத்துக்கு ஜோடியாக பானு நடிக்கிறார். மேலும் பிரேம்ஜி, ஸ்வாதி, ரமணா, சுவாமி நாதன், பவர் ஸ்டார் சீனிவாசன் ஆகியோரும் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். வெங்கட் பிரபு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார்.

இப்படத்தை அரவிந்த் ஸ்ரீதர் இயக்கி வருகிறார். சீனு சித்தார்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியானது. இது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்தில் பரத்துக்கு தாத்தாவாக பிரேம்ஜி நடித்திருக்கிறார். மேலும் பரத் கஞ்சாவுக்கு அடிமையானவராக நடித்திருக்கிறார். இவர் போதையில் இருக்கும் போது பிரேம்ஜி நாயாகவும், நாய் பிரேம்ஜியாகவும் தெரியுமாம்.

நாய் பேசினால் எப்படியிருக்கும் என்பதை வித்தியாசமான முறையில் படமாக்கியிருக்கிறார்களாம். இந்த மாதிரி ஒரு கதையை தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் படமாக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries