நகைகளை அணிந்துகொண்டு சண்டை போட மிகவும் சிரமப்பட்டேன்: அனுஷ்கா

rudramadeviஅனுஷ்கா நடிப்பில் தற்போது வெளியாகவிருக்கும் படம் ‘ருத்ரமாதேவி’. சரித்திர கதையம்சம் உள்ள இப்படத்தில் அனுஷ்கா ராணி வேடத்தில் நடித்திருக்கிறார். ருத்ரமாதேவி ராணியின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகியிருக்கிறது. குணசேகர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். இளையராஜா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

இப்படத்தில் அனுஷ்கா அணிந்திருந்த நகைகள் அனைத்தும் சொக்க தங்கம். இந்த நகைகள் அனைத்தையும் என்.ஏ.சி. ஜூவல்லர்ஸ் நிறுவனம் உருவாக்கி கொடுத்திருக்கிறார்கள்.

படத்திற்கு ஏற்ப நகைகளை தோட்டாதரணி வடிவமைத்து கொடுக்க அதை அப்படியே நகையாக உருவாக்கியிருக்கிறார்கள் என்.ஏ.சி. ஜூவல்லர்ஸ் நிறுவனத்தார். இந்த படத்தில் அனுஷ்கா அணிந்த பழங்கால நகைகளின் கண்காட்சி என்.ஏ.சி. நகைக்கடையில் இன்று தொடங்கியது. இதை அனுஷ்கா தொடங்கி வைத்தார்.

அதன்பின் அனுஷ்கா பேசும்போது, ‘எனக்கு தங்க நகைகள் அவ்வளவாக பிடிக்காது. ஆனால் ‘ருத்ரமாதேவி’ படத்தில் நிறைய தங்க நகைகள் அணிந்துகொண்டு நடித்தேன். நகைகளை அணிந்துகொண்டு சண்டைக்காட்சிகளில் நடிக்க மிகவும் சிரமப்பட்டேன். மேலும் இந்த நகைகளுக்கு ஏதாவது ஆகி விடுமோ என்ற பயத்துடனும் இருந்தேன்.’ என்றார்.

இயக்குனர் குணசேகர் பேசும்போது, ‘ருத்ரமாதேவி’ படம் 3டி படமாக வெளியாக இருக்கிறது. முதலில் இந்த கதையை ஒரு புத்தகத்தில் படித்தேன். பின்னர் இயக்குனரான பிறகு, படத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களையும் சேகரித்து உருவாக்கினேன்.

இப்படத்தை 3டி-யில் பார்க்கும் போது, அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். அனுஷ்காவை ராணியாக பார்க்கும் போது மிகவும் பிரமிப்பாக இருக்கும்.’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online