பிரபுதேவாவிடம் நிறைய கற்றுக்கொண்டேன்: எமி ஜாக்சன்

Amy-Jackson-and-Prabhu-Deva-promote-Singh-Is-Bliing-Movie-(28)‘ஐ’ படத்தில் ரசிகர்களை கவர்ந்த எமி ஜாக்சன் தற்போது இந்தியில் ‘சிங் இஸ் பிளிங்’ என்னும் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். பிரபுதேவா இயக்கியிருக்கும் இப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பிரபுதேவா இயக்கத்தில் நடித்தது குறித்து எமிஜாக்சன் கூறும்போது, ‘பிரபுதேவா திறமையான இயக்குனர். இவருடைய இயக்கத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. பிரபுதேவாவுக்கு தெரியும் ரசிகர்கள் என்ன மாதிரியான படங்களை விரும்புகிறார்கள் என்று.

அதனால்தான் சிறந்த படங்களை இயக்கி வெற்றி பெறுகிறார். நான் அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன். மீண்டும் இவருடைய இயக்கத்தில் நடிக்க விரும்புகிறேன்’ என்றார்.

எமி ஜாக்சன் நடிப்பில் ‘வேலையில்லா பட்டதாரி 2’, ‘கெத்து’ ஆகிய படங்கள் வெளியாகவுள்ளது. மேலும் அட்லி இயக்கத்தில் விஜய்க்கு ஜோடியாகவும் எமி ஜாக்சன் நடித்து வருகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries